குழந்தைகளின் மூக்கையும், காதையும் பட்ஸ்களால் எப்போதும் துடைக்கவேக் கூடாது. காதுகளிலும், மூக்கிலுமுள்ள மென்தசைகள் காயப்படும் அபாயமுள்ளதால் இவை எப்போதும் வேண்டாம்.
குழந்தைகளின் மூக்கு தும்மல் மூலமாகவே சுத்தப்படுத்தப்படும். சுவாசப் பாதை சரியாகிவிடும். எனவே குழந்தையின் மூக்கை சுத்தப்படுத்த வேண்டிய அவசியமிருக்காது.
மூக்கிலிருந்து சிறிதளவு உலர்ந்த சளி வெளியேற்றப்படாமல் இருந்தால், சுத்தமான துணியை சூடாக்கி ஆறிய தண்ணீரில் நனைத்து மூக்கைத் துடைத்து எடுக்கலாம்.
குழந்தையின் வெளிப்பக்க காது மட்டுமே சுத்தப்படுத்தப்பட வேண்டுமேத் தவிர, காதுக்குள் எதையும் நுழைத்து சுத்தப்படுத்தக் கூடாது.
மிகவும் குளிரான சமயங்களில் காதை அணைத்தபடி துணையை சுற்றி வைப்பதும் அவசியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக