குழந்தையை எப்போதும் தூக்கி வைத்துக் கொண்டிருக்காதீர்கள் என்று சொல்லுவார்கள். இது ஒரு புறம் உண்மைதான்.
குழந்தை கீழே இருக்கும் போதுதான் கை கால்களை உதைத்து விளையாடும். அதனால் குழந்தையின் உடல் நல்ல நிலையில் இருக்கும். குடித்த பாலும் செரிக்கும்.
ஆனால் எப்போதும் குழந்தையை தூக்காமல் இருக்கக் கூடாது. தாய் தனது குழந்தையை அவ்வப்போது எடுத்து கொஞ்ச வேண்டும்.
குழந்தையை மார்போடு அணைத்தபடி முத்தம் கொடுப்பது, செல்லமாக கொஞ்சுவது, பாடல்கள் பாடுவது என்பன குழந்தையை உற்சாகமாக வைக்கும் டானிக்.
எனவே உங்கள் குழந்தையை அவ்வப்போது வாரி அணைத்து கொஞ்சலாம். இது பிறந்த குழந்தைக்கு மட்டுமல்ல, ஓடி விளையாடும் குழந்தைகளுக்கும் பொருந்தும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக