குழந்தைகளை நல்லக் குழந்தைகளாக வளர்க்க வேண்டியது நமது கடமையாகிறது. பெற்றோர்கள் செய்யும் சில காரியங்கள்தான் பிள்ளைகளை தவறான வழியில் போக வைக்கிறது.
எந்த குழந்தையையும் அடித்து வளர்க்க வேண்டிய அவசியமில்லை. அதுகாக பாராட்டியே நல்ல குழந்தையாக வளர்க்கலாம்.
தவறு செய்தாலும், அன்று நீ இதனை சரியாக செய்தாயே இப்படி செய்யக் கூடாது என்று உனக்கேத் தெரியுமே என்று அவர்களை முன்னிலைப் படுத்திய வளர்ப்பது நல்லது.
எதுவும் உங்களுக்குத் தெரியாது, இதைச் செய்யாதே, இதைச் செய் என்று நீங்கள் கட்டளைப் போடாதீர்கள். நீங்கள் கட்டளையாகச் சொன்னால் அது அவர்களது காதுகளுக்குப் போகாது.
எனவே அவர்களை தட்டிக் கொடுத்துப் பாருங்கள். அழகாக உங்கள் போக்குக்கு வருவார்கள். நல்ல குழந்தையாக வளர்க்க முதலில் நீங்கள் நல்ல பெற்றோராக வேண்டியது அவசியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக