குளிக்க வைக்கும் ஒவ்வொரு முறையும் குழந்தையின் தலையையும் அலச வேண்டியது மிகவும் முக்கியம். அல்லது ஒரு நாள் விட்டு ஒருநாளாவது குழந்தையை தலைக்கு குளிக்க வைக்க வேண்டும்.
குழந்தையின் தலையை கால்களின் இடுக்கில் வைத்து முகத்தை கீழ் நோக்கிப் பிடித்தபடி தலை முடியை அலசலாம்.
குழந்தைக்குப் போடும் சோப்பு அல்லது ஷாம்புவையே தலைக்குப் பயன்படுத்தலாம். குழந்தை பிறந்த சில மாதங்களுக்கு தலையில் எண்ணெய் தேய்ப்பதை தவிர்க்கலாம்.
குழந்தையின் தலையில் சோப்பு அல்லது ஷாம்புவோ எதைத் தேய்த்தாலும், அதன் தன்மை அகலும் வரை நன்கு அலச வேண்டியதும் அவசியமாகிறது.
குழந்தையின் தலையில் எண்ணெய் தேய்ப்பதால் க்ராடில் கேப் உண்டாவதால் எண்ணெய்த் தேய்க்கக் கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக