பொதுவாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது சாக்லேட் போன்றவற்றைத்தான். ஆனால் அதில் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
சாக்லேட்டுகளை மென்று திண்பதால் பற்களில் சொத்தை ஏற்படலாம். வயிற்றில் பூச்சி ஏற்படலாம். இதனால் குழந்தைகளுக்கு சாப்பிடும் ஆர்வம் குறையலாம்.
எனவே குழந்தைகளுக்கு சாக்லேட் சாப்பிடும் பழக்கத்தை மெல்ல மெல்ல குறைக்கலாம். அதற்கு பதிலாக அவர்களுக்கு பர்ஃபி, வேர்க்கடலை, உடைத்த கடலை போன்றவற்றை அவ்வப்போது சாப்பிடக் கொடுத்துக் கொண்டிருக்கலாம்.
குழந்தைகளுக்கு பிடிக்காத அல்லது உடலுக்கு ஒத்துக் கொள்ளாத பொருட்களை எப்போதும் சாப்பிடக் கொடுக்க வேண்டாம். அவர்களுக்கு ஒரு உணவு பிடிக்கவில்லை என்றால் அதனை திணிக்கும்போது அந்த பொருள் மீது அவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்திவிடக் கூடும்.
ஒரு உணவு பிடிக்கவில்லை என்றால் அதனை அவர்கள் பிடித்த ருசியில் மாற்றிக் கொடுத்துப் பாருங்கள். நல்ல பலன் கிட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக