குழந்தைகளிடம் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள். அதுபோல அன்பான வார்த்தைகளைப் பேசிப் பழகுங்கள்.
நீங்கள் பேசும் அன்பான வார்த்தைகளை அவர்களும் பயன்படுத்துவார்கள். எனவே, சீ போ, நாய் போன்ற வார்த்தைகளைக் கூட மறந்தும் பயன்படுத்தி விடாதீர்கள்.
மேலும், அதுபோன்ற வார்த்தைகளை அவர்கள் பேசினால் அதைக் கேட்டு பூரிப்பதைத் தவிர்க்கவும். அது தவறான வார்த்தை, அவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்று அன்பாய் எடுத்துக் கூறுங்கள்.
மற்றவர்களைப் பற்றியும் குழந்தைகள் முன்பு விமர்சனம் செய்யாதீர்கள். மற்றவர்களை புகழ் பேசுங்கள். ஒரு சிறிய வேலை செய்தாலும் அதற்காக குழந்தையைப் பாராட்டுங்கள். திட்டுவதற்கு பதிலாக எடுத்துக் கூறிப் புரிய வைக்கலாம்.
எதற்கும் குழந்தை மீது கோபம் கொள்ளக் கூடாது. ஏனெனில் அவர்கள் குழந்தைகள், அவர்களுக்கு நல்லது, கெட்டது என்று எதுவும் தெரியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக