பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் காலையில் 6 மணிக்கெல்லாம் எழும்பும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும்.
பின்னர் காலைக் கடமைகளை முடித்துவிட்டு குளித்து, பள்ளிக்குப் புறப்படுவதற்கான வேலைகளை செய்து கொள்ளலாம்.
பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் காலையில் இட்லி, தோசை, உப்புமா போன்ற உணவை உண்ண வேண்டும்.
அதன்பிறகு தலை வாருதல், பள்ளி சீருடை அணிதல், புத்தகங்களை எடுத்து வைத்தல் போன்ற வேலைகளை செய்து முடித்துவிட்டு, கிளம்புவதற்கு முன்பு ஒரு டம்பளர் பால் அருந்துவது அவசியம்.
காலை உணவும், பாலும் குழந்தைகளை மதிய உணவு வரை துவண்டு போகாமல் வைக்க உதவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக