பொதுவாக தற்போது ஒரு சின்ன குடும்பத்தில் அப்பா, அம்மா குழந்தை மட்டும்தான் இருக்கிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு சகோதரத்துவமும், விட்டுக் கொடுக்கும் குணமும் அறவே இல்லாமல் இருக்கிறது.
இது குழந்தையின் எதிர்காலத்தை பெரிதும் பாதிக்கும், எனவே அவர்களது குணத்தை நல்ல முறையில் பேண வேண்டியது மிகவும் அவசியம்.
உறவு முறையில் சகோதர, சகோதரிகள் இருப்பின் அவ்வப்போது அவர்களது வீடுகளுக்கு அழைத்துச் சென்று குழந்தைகளோடு விளையாட விட வேண்டும்.
அவர்களுக்கு ஏதேனும் ஒரு பொருள் வாங்கும்போது, அந்த குழந்தைகளுக்கும் அது போன்ற ஒரு பொருளை வாங்கித் தர வேண்டும். அந்த பொருளை உங்கள் குழந்தையின் கையில் கொடுத்து, அந்த குழந்தைக்கு கொடுக்கச் சொல்ல வேண்டும்.
விளையாடும் பூங்காக்களுக்கு அவ்வப்போது அழைத்துச் சென்று அவர்களை மற்ற குழந்தைகளுடன், உங்களது தலையீடு இல்லாமல், தானாக விளையாட விடுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக