சாப்பிட அடம
சில குழந்தைகள் சாப்பிட அடம்பிடிப்பார்கள். அவர்கள் என்ன செய்தாலும் வாயை மட்டும் திறக்க மாட்டார்கள்.
பூச்சாண்டி வருவதாகவோ, பக்கத்து வீட்டுக் காரர் மிரட்டியோக் கூட சாப்பிட முடியாதக் குழந்தைகளை என்ன செய்வது?
இப்படிப்பட்ட குழந்தைகளை ஒரு சில குழந்தைகளோடு அமர்ந்து சாப்பிட பழக்கப்படுத்துங்கள். அவர்கள் சாப்பிடுவதை விட அதிகமாக நீ சாப்பிட வேண்டும், யார் முதலில் வந்து சாப்பாடு வாங்கப் போகிறார்கள் என்றோக் கூறி ஊட்டி விடுங்கள்.
சேரில் உட்காரவைத்து, டேபிள் போட்டு அதில் அவர்கள் விரும்பிய உணவை வைத்துவிட்டு, இவை எல்லாம் அம்மாவுக்குத்தான். நீ எதையும் சாப்பிடக் கூடாது. சாப்பிட்டால் அவ்வளவுதான் என்று ஒரு மிரட்டல் விடுங்கள். ஒரு சில குழந்தைகள் இதை ஒரு உத்வேகமாக எடுத்துக் கொண்டு சாப்பிடுவார்கள்.
எதையும் அவர்களுக்கு என்று கொடுக்காமல், இது எனக்கு நீ சாப்பிடாதே என்று சொன்னாலே போதும். அது காலியாகிவிடும் வீடுகளும் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக