பிறந்த 3 முதல் 4 மாதம் வரை உங்கள் குழந்தையின் ஒவ்வொரு தேவையையும் நீங்கள் பார்த்து பார்த்து செய்வீர்கள்.
அதன்பிறகுதான் அவர்களது சுய முயற்சி ஆரம்பமாகிறது.அப்போதுதான் நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
நிறங்களை அறியும் திறனும் அப்போதுதான் துவங்கும். எனவே வீட்டின் சுவர்களிலும், மேல் தளத்திலும் வண்ண வண்ண காகிதங்களை ஒட்டுவதும், பலூன்களை தொங்க விடுவதும் நல்லது.
நீங்களும் நல்ல அடர்த்தியான நிறங்களில் ஆடைகளை அணிந்து கொண்டு குழந்தையின் அருகே சென்றால் உங்களை உற்று நோக்கும். அப்படியும், இப்படியும் சென்று கொண்டிருந்தால் உங்களைப் பார்ப்பதற்காக தலையை அசைக்கத் துவங்கும்.
அதற்காக கண்ணைப் பறிக்கும் நிறங்களில் உலாவி குழந்தைக்கு நிறத்தின் மீதே வெறுப்பை உண்டாக்கிவிட வேண்டாம்.
அதிகமாக பச்சை, நீலம் போன்ற நிறங்களை குழந்தையின் முன்பு தொங்கி விடுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக