வாயில் போட்டு விழுங்கும் வகையில் உள்ள சிறிய விளையாட்டுப் பொருட்களை குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது. அதேபோல் தரையில் கிடக்கும் எதையும் வாயில் போடக்கூடாது என குழந்தைக்கு தொடர்ந்து அறிவுறுத்துங்கள்.
தரையில் குழந்தைகள் சிறுநீர் கழித்தால் உடனே அந்த ஈரத்தை துடைத்து விடவும். இல்லாவிட்டால் குழந்தை நடந்து செல்லும் போது வழுக்கி விழ நேரிடலாம்.
வீட்டுக் கதவை மூடும்போது குழந்தை கையை நசுக்கிக் கொள்வது சகஜம். எனவே, குழந்தைகள் உள்ள வீட்டில் கதவை மூடும் போது அதிக கவனம் தேவை.
குழந்தைகளை ஒருபோதும் அதிகமான வெப்பத்துக்கு உட்படுத்த வேண்டாம். நீண்ட தூரம் குழந்தையை அழைத்துச் செல்ல வேண்டுமென்றால் இருசக்கர வாகனங்களில் செல்வது சரியல்ல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக