எந்தக் குழந்தையும் பயந்த சுபாவத்துடன் இருக்கும். ஆனால் அவை அப்படியே வளர வேண்டிய அவசியமில்லை.
உங்கள் குழந்தைக்கு நீங்கள் தைரியமூட்டி சில விஷயங்களை தாங்களாகவே செய்யும்படி கற்றுக் கொடுங்கள்.
நடக்க ஆரம்பிக்கும்போது உற்சாகப்படுத்தி, விழுந்தால் அரவணைத்து, மீண்டும் நடக்க தைரியம் அளிக்க வேண்டும்.
எதையும் செய்து சாதித்துவிட்டு வா என்று கூறி அவர்களை வீரர், வீராங்கனைகளாக்க வேண்டுமேத் தவிர கோழைகளாக்கக் கூடாது.
எத்தனையோ விஷயங்களை குழந்தைகள் செய்ய ஊக்கப்படுத்த வேண்டும். பெண் குழந்தைகளாக இருந்தாலும் சரி, ஆண் பிள்ளையாக இருந்தாலும் சரி அவர்களுக்கு தற்காப்புக் கலையைக் கற்றுக் கொடுப்பதும் நல்லது.
கலையிலும், கல்வியிலும் மேம்பட வேண்டும் எனில் தைரியம் மிக மிக அவசியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக