பிரசவம் ஆனவுடன் வயிற்றின் சதையைக் குறைக்க எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
தொடர்ச்சியாக ஆறு மாதம் பயிற்சி செய்தால் வயிற்றுச் சதை குறைந்துவிடும்.
அதேப் போல வயிற்றில் உப்பியப் பகுதியில் மென்மையான துணியை பெல்ட் போல மடித்து லேசாக இறுக்கி அணிவதும், பெல்ட் வாங்கி அணிவதும் நல்லதுதான்.
பல மருத்துவமனைகளிலும், வயிற்றில் சதையைக் குறைக்க பயிற்சிகளை சிறப்பு நிபுணர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. அதை ஏனோ தானோவென்று நினைக்காமல், தொடர்ந்து இந்தப் பயிற்சியை செய்து வந்தால் வயிறு பெரிதாக இருக்கிறதே என்று நினைத்து கவலைப் பட வேண்டாம்
குழந்தை பிறந்ததும் கண்டபடி சாப்பிட்டு உடல் எடையைஅதிகரித்துக் கொள்ளும் வழக்கத்தையும் மாற்றுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக