தற்போதைய நாகரீக உலகில் பெண் குழந்தைகளை பொக்கிஷம் போல பொத்தி பொத்தி வளர்க்க வேண்டாம்.
பெண்கள் என்பவர்கள் நகைக் கடை கூடமாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. அந்த காலம் மாறிவிட்டது.
இப்போது பெண்களும் ஜீன்ஸ், டீசர்ட் என அணிகிறார்கள். அவர்களது விருப்பத்திற்கேற்ப அவர்களது ஆடைகளை அணிய விடுங்கள். பார்க்க கவர்ச்சியாகவோ, அசிங்கமாகவோத் தெரியும் ஆடைகளை மட்டும் இது வேண்டாம் என்றுக் கூறி தவிர்த்து விடுங்கள்.
மற்றபடி அவர்கள் விரும்பும் ஆடைகளை அணிய சுதந்திரம் கொடுங்கள். குழந்தைப் பருவத்தில் இருந்தே, சர்ட், பேன்ட் போட்டு வளர்ந்தால் இளம் வயதாகும் போது இதுபோன்ற உடைகள் அசிங்கமாகவும் தெரியாது.
இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டு செல்வதற்கும், தொழிற்சாலைகளில் பணியாற்றவும் இதுபோன்ற ஆடைகள் தான் நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக