பக்கங்கள்

செவ்வாய், 5 ஜனவரி, 2010

அதிக செல்லம் வேண்டாம்

குழந்தைகளுக்கு அதிக செல்லம் கொடுக்க வேண்டாம். செல்லம் கொடுத்து கெடுத்த குழந்தைகள் ஏராளமானோர் ஏற்கனவே இருப்பதால் உங்கள் குழந்தையையும் அந்த பட்டியலில் சேர்க்காதீர்கள்.

அன்பை வெளிப்படுத்துவதில் கூட ஒரு ஒழுங்கு நெறி இருக்க வேண்டும்.

அவர்களது கடமையில் இருந்து தவறும்போதோ அல்லது தவறு என்று தெரிந்தும் அதனை செய்யும்போதோ அது தவறு என்று எடுத்துக் கூற வேண்டியது அவசியம்.

அதற்காக அடிப்பதோ, தண்டனை கொடுப்பதோ அவர்களை திருத்த உதாவது. எடுத்துக் கூறி புரிய வைப்பதுதான் நல்லது.

எதைச் செய்தாலும் குழந்தைத் தானே என்று சொல்வதும், தவறாகப் பேசும்போது அதனைக் கேட்டு ரசிப்பது அல்லது சிரிப்பதும் தவறான பழக்கமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக