குழந்தைகளை பெரும்பாலும் மெத்தையிலேயே போட்டு வைப்பது சரியல்ல.
அதற்காக உடம்பைக் குத்தும் பாயிலோ, வெறும் தரையிலோ படுக்க வைக்கக் கூடாது.
குழந்தைகளின் தலை ஒரு வடிவம் இல்லாமல் மேடும் பள்ளமுமாக இருக்கும். முந்தைய காலத்தில் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தலையை அமுக்கி தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டுவார்கள்.
ஆனால் இப்போது அப்படி யாரும் செய்வதில்லை. அதனால் பல குழந்தைகளின் தலை விசித்திர வடிவத்தில் காணப்படும்.
இதற்கு நல்ல தீர்வு குழந்தையை மெல்லிய துணியை மடித்து தரையில் போட்டு அதன் மீது படுக்க வைப்பதே. குழந்தை தலையை திருப்பி திருப்பி பார்க்கும் போது அதன் வடிவம் உருண்டையாக மாறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக