அதாவது ஒருவரின் உயரத்திற்கு ஏற்பவே அவர் உடல் நிறை பேணப்பட வேண்டும்
உங்கள் நிறை உங்களுக்குப் போதுமானதா என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கும். இதை எவ்வாறு அறிந்து கொள்வது?
அதற்காக உடற் திணிவுச் சுட்டி(Body Mass Index ) என்ற அலகு பயன்படுத்தப் படுகின்றது . உங்கள் உடலின் உடற் திணிவுச் சுட்டியை கணிப்பதன் மூலம் உங்கள் உடல் நிறை உங்களுக்குப் போதுமா என்று அறிந்து கொள்ளலாம் .
உடற் திணிவுச் சுட்டி = உங்கள் உடலின் நிறை / உடலின் உயரத்தின் இரண்டு மடங்கு
அதாவது நீங்கள 70kg நிறையும் 160cm (1.6m) உயரமும் உடையவர் என்றால் உங்கள் உடற்தினிவுச் சுட்டி
= 70 /1.6 x 1.6
=27.3
இனி இந்த உடற்தினிவுச் சுட்டியின் மூலம் நமது நிறை நமக்குப் பொருத்தமானதுதானா என்று எப்படி அறிந்து கொள்வது?
மிகவும் இலகுவானது...
உங்கள் உடற் திணிவுச் சுட்டியை கணித்த பின் கீழே உள்ள அட்டவணையில் உள்ள படி உங்களின் நிலையை அறிந்து கொள்ளலாம்.
- உங்கள் உயரத்திற்கு ஏற்ப நிறை போதாது (Underweight ) = <18.5
- உங்கள் உடல் நிறை பொருத்தமானது (Normal weight )= 18.5-24.9
- உங்கள் உடல் நிறை அதிகமானது (Overweight )= 25-29.9
- உங்கள் உடல் நிறை அளவுக்கு அதிகமாகிவிட்டது (Obesity )= 30 அல்லது அதற்கு மேலே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக