பக்கங்கள்

சனி, 17 ஜூலை, 2010

கர்ப்பம் தரிக்க உடலுறவு கொள்ள வேண்டிய காலம்..

ஒரு பெண் தன மாதவிடாய் நாட்கள் பற்றி தெளிவாக அறிந்து கொண்டிருக்க வேண்டும். அநேகமான பெண்களிலே மாதவிடாய்  ஒழுங்காக 28 தொடக்கம் 32 நாட்களுக்கு இடைப்பட்ட  காலப்பகுதிகளிலே ஏற்படும்.

ஒரு மாதவிடாய் ஆரம்பிக்கும் முதல் நாளில் இருந்து அண்ணளவாக பதினாலாவது நாள் அந்தப் பெண்ணில்  முட்டை வெளியேறும். இந்த முட்டை வெளியேறி 24 மணித்தியாலத்திற்குள் ஆணின் விந்தைச் சந்தித்தால் கருக்கட்டல் நடைபெற்று குழந்தை உருவாகும்.

ஆணின் விந்தானது பெண்ணின் யோனியினுள் உட்செளுத்தப்பட்டு 72 மணித்தியாலங்கள் வரை உயிரோடு இருக்கும்(கருக்கட்டக் கூடிய நிலையில்).

ஆக , நீங்கள் கர்ப்பம் தரிப்பதற்கு உகந்த காலம் உங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட முதல் நாளில் இருந்து பதினோராவது நாளுக்கும்  பதினைந்தாவது நாளுக்கும் இடைப்பட்ட காலமாகும்.

அதாவது நீங்கள் மாதவிடாய் ஏற்பட்டு பதினோராவது நாளில் இருந்து உடலுறவில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஈடுபடும் போது கருக்கட்டல் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம்அதிகமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக