அதிகமாக உடற்பயிற்சி செய்வது
உடம்பைக் கச்சிதமாக வைத்திருப்பது நல்லதுதான். ஆனால் அதிகமான உடற்பயிற்சி, நன்மையை விட அதிகம் தீமையே பயக்கும் என்று இதய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். “நம்மை நாமே தடித்துக்கொள்ளும் ஒரு முறையாக உடற்பயிற்சியை வைத்துக் கொள்ளக் கூடாது” என்கிறார் யோகா நிபுணரும், உணவியல் வல்லுநருமான ருஜுதா. “அமைதியான மனநிலையில் நீங்கள் தியானம் செய்யும்போது அது அற்புதமாக பலன் தரும். அதை போல ஓய்வான உடம்புக்குத்தான் உடற்பயிற்சி நல்லது” என்கிறார் ருஜுதா.
நீங்கள் உங்கள் உடம்புக்கு ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய மிக பெரிய தீங்கு, ஏற்கனவே தளர்வாக உள்ள நிலையில் மேலும் கடுமையாக உடற்பயிற்சி செய்வது. “போதுமான தூக்கம் இல்லாதவர்களுக்கு உள்உடலியல் செயல்பாட்டு வேகம் குறைகிறது. எனவே அவர்களால் எடையையும் குறைக்க முடியாது. மாறாக அவர்கள் `பொதுபொது’ என்று ஆகிவிடுவார்கள்” என்று ருஜுதா எச்சரிக்கிறார்.
முக்கியமான விஷயம், வாழ்க்கை, வேலை, உடற்பயிற்சி எல்லாவற்றுக்கு இடையிலும் ஒரு சமநிலையை ஏற்படுத்திக் கொள்வதுதான். எல்லாவற்றுக்கும் மேலாக முக்கியமானது உறக்கம். நவீன வாழ்க்கை முறை உங்கள் உடல்நிலையை பாதிக்க அனுமதிக்காதீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக