பக்கங்கள்

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

சச்சின் டெண்டுல்கரும், சவுரவ் கங்குலியும்

வருடம் கி.பி 2046

சச்சின் டெண்டுல்கரும், சவுரவ் கங்குலியும் ஒரு பூங்காவில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

திடீரென சச்சினுக்கு ஒரு சந்தேகம், சுவர்க்கத்தில் கிரிக்கெட் விளையாடுவார்களா ? இருவரும் விவாதித்து விவாதித்து ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. எனவே இருவரும் ஒரு ஒப்பந்தத்துக்கு வந்தார்கள்.

இருவரில் யார் முதலில் இறக்கிறார்களோ அவர்கள் உயிரோடிருப்பவருக்கு தகவல் சொல்ல வேண்டும். சொர்க்கத்தில் கிரிக்கெட் விளையாட்டு உண்டா இல்லையா என்று.

நாட்கள் நகர்ந்தன.

பாவம் சச்சின். மெக்ராத் பந்தில் கிளீன் போல்ட் ஆவது போல கனவு கண்டு மாரடைப்பில் ஒரு நாள் மரித்துப் போனார்.

கங்குலி அதே பூங்காவில் காத்திருந்தார். சச்சினின் தகவலுக்காக.
திடீரென்று ஒரு குரல்..

கங்குலி…கங்குலி….

அழைத்தது சச்சினே தான். பரவசமடைந்த கங்குலி வேக வேகமாகக் கேட்டான். சச்சின், சுவர்க்கத்தில் கிரிக்கெட் விளையாடுகிறார்களா ?
சச்சின் சொன்னார், உனக்குச் சொல்ல இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று நல்ல விஷயம் , இன்னொன்று கொஞ்சம் மோசமான விஷயம் தான்.

சரி சொல்லு, கங்குலி கேட்டான்

சுவர்க்கத்தில் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். இது நல்ல செய்தி.

சரி மோசமான செய்தி என்ன ?

வரும் வெள்ளிக்கிழமை நீ தான் துவக்க ஆட்டக்காரர் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக