தேவையானவை
இறால் - 1 கப்
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
தக்காளி - 2
வெங்காயம் - 2
பூண்டு - 1
மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - சிறிது
கறிவேப்பிலை சிறிது
தாளிக்க - எண்ணெய், கடுகு, வெந்தயம்
செய்யும் முறை
இறாலைத் தோல் உரித்து கழுவி வைத்துக் கொள்ளவும்.
புளியை தேவையான அளவிற்கு நீர் விட்டுக் கரைத்து, அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து ஒரு தக்காளியையும் போட்டு கரைத்துக் கொள்ளவும்.
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், கறிவேப்பிலைப் போட்டு தாளித்து வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
பிறகு இறாலைப் போட்டு வதக்கியதும், தக்காளியையும், பூண்டையும் போட்டு வதக்கவும்.
கடைசியாக கரைத்து வைத்துள்ள புளிக் கலவையை ஊற்றி கொதிக்க விட்டு இறக்க்வும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக